ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் சவுதி அரெபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முக்கிய வீரர்களை அணிகள் வாங்கிய நிலையில், ஏலத்தின் 2-ம் நாள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் இரண்டு வீரர்காள ஏலத்துக்கு கொண்டுவரப்பட்ட கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. தொடர்ந்து ரோவ்மன் பவ்வலை ரூ. 1.50 கோடிக்கு கொல்கத்தாவும், டூபிளஸ்ஸியை ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கியது.