திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம், மகன் 13 வயதுடைய வெற்றிவேலன். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட வெற்றிவேலன், இன்று (நவ.25) பள்ளிக்கு சென்ற நிலையில், வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.