'ராமதாஸுக்கு வேலை இல்லை' என்று கூறியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, "ஆணவத்துடன் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல. முதல்வர் முதலில் ஐயாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தொண்டர்களின் உணர்வை கட்டுப்படுத்த முடியாது" என்று எச்சரித்துள்ளார்.