திருப்பூர்: தாராபுரத்தில் மகளுக்கு 4 வருடமாக தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 சிறுமியின் பள்ளியில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை குறித்து ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியை அந்த சிறுமியின் தாயிடம் தகவல் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன்பின், சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.