தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 880 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டுக்கு நாளை (நவ.26), நாளை மறுநாள் (நவ.27) ஆகிய இரண்டு தினங்களும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.