நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இராசிபுரத்தில் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.