எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சேலத்தில் களைகட்டி உள்ளது. காலை முதலே அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தனது பிறந்தநாளை இபிஎஸ் கொண்டாடினார். பின்னர் 7 பேருக்கு கன்றுடன் கூடிய கறவை மாடுகள் பரிசாக வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகங்கள் வழங்குதல், ஏழை எளியோருக்கு பிரியாணி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.