போகி தினத்தில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை எரித்து காற்றை மாசுபடுத்தக் கூடாது. இந்திரன், சூரியன் மற்றும் வீட்டு தெய்வங்களை வரவேற்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது. காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செய்யக்கூடாது. நடுரோட்டில் எரிக்கிறீர்கள் என்றால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்ய வேண்டும். எரித்த பின்னர் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.