கடத்தூர்: வாரச்சந்தையில் 4. 40 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை சந்தை நடைபெறுகிறது. 

ஜனவரி 5 நேற்று நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். நேற்றைய சந்தையில், 128 கட்டுக்களை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலையாக 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 22,000 ரூபாய் வரையில் விற்பனையானது. மேலும் நேற்று (ஜன.5) ஒரே நாளில் 4.40 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி