தர்மபுரி: நகராட்சி ஊழியர்களை சிறைப்பிடித்த BSNL ஊழியர்கள்

51பார்த்தது
தர்மபுரி நகராட்சி பகுதியில் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் 3 இடங்களில் உள்ளன. இடங்களில் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்த இடங்களுக்கான சொத்துவரி, குடிநீர் வரி ஆண்டுதோறும் கட்ட வேண்டும். ஆனால் கடந்த 2012-2013ம் ஆண்டு முதல் வரி செலுத்தாமல் ரூ. 34 லட்சம் நிலுவை உள்ளது. இந்த வரியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம், பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனாலும் குறைந்த தொகை மட்டும் செலுத்தப்பட்டது. இன்று மாலை பாரதிபுரம் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மெயின் இரும்புகேட்டில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள ஜிஎம் ஆபீசுக்கு வருவாய் ஆய்வாளர் மாதையன், 20 தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வந்தனர். அங்கு நகராட்சி்க்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத்தொகையை உடனே தரும்படி கேட்டனர். அங்கிருந்து பதில் சரியாக வராததால், நகராட்சி பணியாளர்கள் ஜிஎம் ஆபீஸ் நுழைவாயிலில் தரையில் அமர்ந்தனர். இதனால் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய நபர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
மேலும் பிஸ்எஸ்என்எல் ஊழியர்கள் மெயின் இரும்புகேட்டை பூட்டினர். ஒருபுறம் நகராட்சி பணியாளர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். மற்றொருபுறத்தில் மெயின்கேட்டு பூட்டப்பட்டது. நகராட்சி பணியாளர்கள், அலுவலகர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி