காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு கொடூர தண்டனை! (வீடியோ)

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இளம்பெண் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட திருமணமான பெண் சமீபத்தில் காதலனுடன் தலைமறைவாகி உள்ளார். உறவினர்கள் அப்பெண்ணை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வந்து, கிராமத்தினர் முன்னிலையில் 4 பேர் அவளை பிடித்துக் கொள்ள மரக்கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி