இணையத்தில் கசிந்த "பித்தல மாத்தி" திரைப்படம்

85பார்த்தது
இணையத்தில் கசிந்த "பித்தல மாத்தி" திரைப்படம்
2021-ம் ஆண்டு வெளியான 'தண்ணி வண்டி' என்ற படத்தின் பெயரை 'பித்தல மாத்தி' என மாற்றி படக்குழுவினர் கடந்த 14-ந்தேதி ரீ-ரிலீஸ் செய்திருந்தனர். இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி ராமையா மற்றும் அவரது தந்தை தம்பி ராமையா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், திரையில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 'பித்தல மாத்தி' திரைப்படம் இணையத்தில் கசிந்ததாக படக்குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த படம் 'எச்.டி.' தரத்தில் இணையத்தில் வெளியாகி இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி