“சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை” - அமைச்சர் ரகுபதி

66பார்த்தது
“சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை” - அமைச்சர் ரகுபதி
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் பலரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், “இந்த கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை. சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசு உண்மையை மறைத்ததால் சிபிஐ விசாரணை கோரப்பட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி