விஜய் பிறந்தநாள் - பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

58பார்த்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி விஜய் மாவட்ட நிர்வாகிகள், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தனர். முன்னதாக, கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என விஜய் உத்தரவிட்ட நிலையிலும் இன்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி