“அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது பச்சை பொய்” - இபிஎஸ்

51பார்த்தது
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் பலரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராயம் குடித்தவர்கள் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாகவே பலி எண்ணிக்கைக்கு காரணம் என அமைச்சர் மா.சு கூறுவது பச்சை பொய்” என கூறியுள்ளார்.

நன்றி: அப்டேட் நியூஸ் 360

தொடர்புடைய செய்தி