விஷ சாராய விவகாரம்: 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

52பார்த்தது
விஷ சாராய விவகாரம்: 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு பதிவு செய்துள்ளனர். சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி