விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொருளாதார பேராசிரியர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவிக்கு, குமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவியை செல்போனில் தொடர்புகொண்டு, தவறான முறையில் பேராசிரியர் குமார் பேசியதாக தெரிகிறது. மேலும், பாண்டிச்சேரிக்கு போகலாம் என அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்த நிலையில், கைது செய்யப்பட்டார்.