உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் இன்று (மார்ச்.,1) கணவரை, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி அவரது காதலனுடன் சாலையில் சுற்றித் திரிந்ததை அவரது கணவர் பார்த்துள்ளார். உடனே, அந்த காதலனை இழுத்துப்போட்டு கணவர் அடிக்கத் தொடங்கினார். உடனே அங்கு சென்ற அப்பெண், தனது காதலனுடன் சேர்ந்து கணவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.