ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர்-பாரி சாலையில் இளைஞர்கள் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சாலையில் வேகமாக சென்ற லாரி ஒன்று, திடீரென இடதுபக்கம் சாய்ந்தது. அப்போது, அந்த லாரி பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்துக்குள்ளான இளைஞர்களின் கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.