பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மருத்துவரை அண்மையில் பிரபல யூடியூபர் சயித் அலி பேட்டி எடுத்தார். இளம்பெண் கூறுகையில், "வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். முதல் 5 மாதங்கள் என் கணவர் மற்றும் குடும்பத்தார் காரில் தினமும் வெளியே சென்றனர். பிறகு தான், அவர்கள் அனைவரும் ஊனமானவர்கள் போல நடித்து பிச்சை எடுப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து என் தந்தை வீட்டிற்கு நிரந்தரமாக வந்துவிட்டேன்” என்றார்.