தேர்வுக்கு கிளம்பி சென்ற மாணவி வழியில் காதலரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. திருமணமானது கடந்த பிப். 22-ல் நடைபெற்றதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரில் தேர்வு சமயத்தில் இதுபோல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.