AI தொழில்நுட்பம் (Artificial intelligence) மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது. ஆனால் மறுபுறம், இது புதிய சிக்கல்களையும், பல பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. இந்நிலையில், சீனாவில் நடந்த ஒரு நிகழ்வில், AI-யால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ரோபோ திடீரென கூட்டத்தைத் தாக்க முயற்சி செய்துள்ளது. அந்த ரோபோ தாக்குதல் கூட்டத்திலிருந்த மக்களைப் பீதியடையச் செய்துள்ளது. மென்பொருள் பிழை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.