மகாராஷ்டிரா: உல்ஹாஸ் நகரில் உள்ள காய்கறி சந்தைக்கு அருகில் உள்ள சாக்கடை தண்ணீரில் காய்கறிகள் மற்றும் கீரைகளை வியாபாரி ஒருவர் கழுவும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல தண்ணீரில் கழுவுவது போல சாக்கடை தண்ணீரில் அவர் பொறுமையாக கையை விட்டு கழுவுவதை காண முடிகிறது. இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட அது வைரலாகியுள்ளது.