கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் வாடிக்கையாளர்களுக்கு துணிகளை காட்டும் போது துணிக்கடை ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார். அங்குள்ள ஒரு துணிக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஊழியர் துணிகளைக் காண்பிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார், பின்னர் அப்படியே கீழே சரிந்து இறந்தார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இறந்தவர் 43 வயதான பவார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.