கோவை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், பேருந்தில் இருந்து கணவர் இறங்கிவிட்டதாக நினைத்து ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த அந்த பெண் கணவருடன் கோவை வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.நன்றி:சன் நியூஸ்