மும்மொழி கொள்கையை ஆதரிப்போம்: மாற்றி கோஷமிட்ட திமுகவினர்

64பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளியில் விழா கொண்டாடிய திமுகவினர் மும்மொழி கொள்கையை எதிர்ப்போம் என சொல்வதற்கு பதிலாக ஆதரிப்போம் என மாற்றி கோஷமிட்டனர். முதலில் இந்தியை எதிர்ப்போம் என கூறிவிட்டு, அடுத்து மும்மொழி கொள்கையை ஆதரிப்போம் என கோஷம் போட்டனர். பின்னர் சுதாரித்து கொண்டு மும்மொழி கொள்கையை எதிர்ப்போம் என கோஷம் போட்டனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி