கோவையில் உள்ள KFC உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அந்நிறுவனத்திற்கு ரூ. 10,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான கார்த்திகா கூறுகையில், "நான் கடைக்கு சென்றதும் ஒரு பீஸ் சிக்கனை குப்பையில் போட்டனர், ஆனால் பெரிய கடை என அதை கண்டுகொள்ளாமல் சாப்பிட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது” என்றார்.