அமெரிக்கா: கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையானதால் கெல்லி (38) என்ற பெண்ணின் மூக்கின் மேல் பகுதியில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துள்ளது. கெல்லி கடந்த 19 மாதங்களாக சுமார் ரூ.70 லட்சத்திற்கு அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உள்ளார். தற்போது அவரின் முகத்தில் 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, குணமடைந்து வருகிறார். இந்நிலையில், யாரும் போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என கெல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.