கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மளிகை கடைக்காரருடன் ஏற்பட்ட தகராறில் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் கடைக்குள் காரை ஏற்றி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பாலச்சந்தர் என்ற பேராசிரியர் நேற்று (பிப். 28) இரவு இந்த செயலில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவரின் மனைவி செய்வதறியாது பரிதவித்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.