
மக்கள் தொகையை அதிகரிக்க சீனாவின் புதிய பிளான்
சீனாவில் குழந்தை பேறு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக திருமண விதிகளை அந்நாட்டு அரசு இலகுவாக்கியுள்ளது. புதிதாக திருமணமானவர்கள், தங்களின் திருமணத்தை உள்ளூரிலேயே இனி பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திருத்தம் கொடு வரப்பட்டுள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்தவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய சொந்த ஊர்களுக்குச் செல்வதால் ஏற்படும் செலவுகள் குறையும் எனக் கூறப்படுகிறது.