ஒடிசா மாநிலம் சிங்கஜ்காரில் உள்ள குழந்தைகளின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக 95 வயதான சபித்ரி மாஜ்ஹி என்ற பாட்டி தனது 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். குழந்தைகள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவதும், அவர்களின் வெற்றியும் தனக்கு சந்தோஷத்தை தருவதாக தெரிவித்துள்ள பாட்டி, இதற்கு முன் பள்ளிகள், கல்லூரி, கோயில் போன்றவற்றை கட்டவும் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.