திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் மல்லிகை தெருவில், ஒருவரது வீட்டில் நகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பாம்பு ஒன்று தண்ணீர் கேனில் வந்து விழுந்துள்ளது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாம்பை ஒரு டப்பாவில் அடைத்து அப்புறப்படுத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.