9 பெண்களை திருமணம் செய்த கல்யாண ராமன்

84பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் ராஜன்கெலாட் என்ற நபர் 9 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு வேலைகள் அல்லது நல்ல வருமானம் உள்ள பெண்களை குறிவைத்து இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் சில மனைவிகளுடன் இவருக்கு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், குழந்தைகளின் கல்வி செலவு, வீடு கட்டுவது என கூறி மனைவிகள் பெயரில் ரூ.41 லட்சம் வரை லோன் வாங்கி பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து மனைவிகள் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி