குப்பைத் தொட்டியில் வெடித்த மர்ம பொருள்.. ஒருவர் பலி

83பார்த்தது
தெலங்கானா மாநிலத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், தூய்மைப் பணியாளர் நாகராஜூ என்பவர் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மர்மான பொருள் ஒன்று வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜூ உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி