புதிய பாம்பன் பாலம் நவம்பர் மாதம் திறப்பு
ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியை இணைக்கும் புதிய பாம்பன் பாலம் வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட்டு, ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்துள்ளார். புதிய பாம்பன் பாலத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டும் ரயில் பயணிக்கும். அதிகமான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்க நேர்ந்தால், 2வது வழித்தட பணி மேற்கொள்ளப்படும்" என்று பேட்டியளித்துள்ளார்.