
கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகை தமன்னாவிடம் விசாரிக்க முடிவு
புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அசோகன் கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரத்தை நம்பி அதில் முதலீடு செய்தார். இதே போல 10 பேர் ரூ. 2 கோடியே 60 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்தனர். மோசடி நிறுவனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு நடிகை தமன்னா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் வந்தனர். அவர்களிடம் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.