காதில் அழுக்கு எடுப்பதாக நினைத்து பலரும் ‘பட்ஸ்’ பயன்படுத்தி குடைகிறோம். இது அழுக்கு கிடையாது, பாதுகாப்புக்காக காதில் சுரக்கும் மெழுகு. காது குடையும் போது மெழுகு உள்ளே தள்ளி பெரிய அழுக்கு உருண்டையாக மாறிவிடும். காதுகளில் எந்தவொரு பிரச்சனை என்றாலும் மருத்துவரிடம் சுத்தம் செய்து கொள்வதே சிறந்தது. பட்ஸ், சாவி, குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காது குடைந்தால் காதில் உள்ள சவ்வு கிழிவதற்கான வாய்ப்பு அதிகம்.