”முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 31 கோடி குடியிருப்புகள் இருக்கிற நிலையில் 49.5 கோடி முத்ரா கடன் வழங்கியிருப்பதாக கூறியிருப்பதும் வடிக்கட்டிய பொய். தமிழகத்தில் 2023 - 24ம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது?. அதனுடைய மொத்த தொகை என்ன? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்வெளியிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.