பிரபல இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை, அவரது நண்பர்கள் தலையீட்டில் தீர்த்து வைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரி 25 அன்று கேரளாவின் கொச்சியில் நடத்த இருந்த ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பாக ஒப்பந்தத்தை மீறியதாக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தமிழில், மீண்டும் ஒரு காதல் கதை, வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.