கடித்தது எலியா? பாம்பா? குழப்பத்தில் பிரிந்த உயிர்

77பார்த்தது
கடித்தது எலியா? பாம்பா? குழப்பத்தில் பிரிந்த உயிர்
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே வசித்து வரும் இயேசுதாசன் மனைவி மணி. இவர் சமையலுக்காக வீட்டில் இருக்கும் அறையில் தேங்காய் எடுக்க சென்றுள்ளார். கையை உள்ளே விட்டபோது எதோ ஒன்று கண்டித்துள்ளது. அப்போது அங்கிருந்து எலி ஒன்று ஓடியுள்ளது. கடித்தது எலிதான் என நினைத்துக்கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு மயக்கம் வர தொடங்கியுள்ளது. அண்டைவீட்டார் வந்து பார்த்தபோது தேங்காய் குவியலுக்குள் நல்லபாம்பு இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி