

தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டி தீர்க்கும் மழை (Video)
தென் மாவட்டங்களில் நேற்று (மார்ச். 01) இரவு முதலே பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியின் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இன்றும் சில இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி: சன் நியூஸ்