பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2023 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனைவருக்கும் இது கட்டாயம். மற்றவர்கள் பாஸ்போர்ட் திருத்த விதிகள் 2025-ன் படி பிறப்பு சான்றாக மாற்று ஆவணங்களை
சமர்ப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு கல்விச் சான்று, நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்தலாம்.