மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

55பார்த்தது
மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிபட்டியில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பந்தயத்திற்கு தயாராக்கி வந்த சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மகன் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. காவிரிசெட்டிபட்டியைச் சேர்ந்த முனியாண்டி அரிவாளால் வெட்டியதில், அவரது மகன் ரஞ்சித் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி