மின்சாரம் தாக்கி நால்வர் உயிரிழப்பு.. முதல்வர் நிவாரணம்

82பார்த்தது
மின்சாரம் தாக்கி நால்வர் உயிரிழப்பு.. முதல்வர் நிவாரணம்
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். விஜயன் (52), சோபன் (45), மனு (42) மற்றும் ஜெஸ்டிஸ் (35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி