2000 ரூபாய் நோட்டுகளில் 98.18 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே நேரம் இன்னும் 6,471 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் பொதுமக்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி பார்த்தால் 1.82% பணம் திரும்பி வரவில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு மே 19-ல் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.