நாடு முழுவதும் பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய கடைகள் வரையில் பிரதானமாக UPI மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாட்டில் UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் கடந்த ஜனவரியில் ஒட்டுமொத்தமாக சுமார் 1,700 கோடி UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.