விருதுநகர் மாவட்டத்தில், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் மூலப்பொருட்களான சல்பர், பொட்டாசியம் குளோரேட் மற்றும் பொட்டாசியம் பெர் குளோரேட் ஆகிய இராசாயணப் பொருட்களை விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் படிவம் எண்: VIII--இன்படி உரிமம் பெற்றுள்ள டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்களினால் ஏற்படும் தீ / வெடி விபத்துகளினாலும், வீடுகளில் கள்ளத்தனமாக உரிய அனுமதியின்றி கருந்திரி உற்பத்தி செய்யும் போது ஏற்படும் வெடி விபத்துகளினாலும், தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகளும் மற்றும் பலர் காயமடைந்தும் உள்ளனர். எனவே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்திக்குத் தேவையான பட்டாசு உற்பத்தி செய்யும் மூலப்பொருள்களான சல்பர், குளோரேட் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரசாயனப் பொருட்களை தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுள்ள தொழிற்சாலையினருக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன். தெரிவித்துள்ளார்.