"நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்ட கூடாது"

75பார்த்தது
"நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்ட கூடாது"
நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஹிமா கோலி, "மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம். நீதிபதியின் தனிப்பட்ட மத நம்பிக்கை, அவர் நீதி வழங்குதலில் குறுக்கிடலாம் என்ற அச்சம் மக்களிடம் வந்துவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி