ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இந்திய கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த 3 இலங்கை மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.