பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

82பார்த்தது
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் இன்று (செப்.19) இந்திய நேரப்படி மதியம் 2.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 195.3 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால், பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி